5000 கோடி பணத்துடன் முதல்வர் துபாய் சென்றாரா? அண்ணாமலை அதிர்ச்சி கேள்வி!
வெள்ளி, 25 மார்ச் 2022 (21:40 IST)
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்று இருக்கும் நிலையில் அவர் 5000 கோடி பணத்தை எடுத்துச் சென்று விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
முதல்வர் ஸ்டாலின் தற்போது துபாய்க்கு தனியாக செல்லவில்லை என்றும் அவருடன் ஒரு பட்டாளமே சுற்றுகிறது என்றும் கூறியுள்ள அண்ணாமலை முதல்வரின் பயணத்தை ஒட்டி 5000 கோடி ரூபாய் எடுத்து சென்றுள்ளதாக செய்திகள் வருகின்றன என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
துபாயில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்கு 5000 கோடி பணம் எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்