அரசியல் புரிதல் இல்லாமல் பேசுகிறார் சீமான்: அண்ணாமலை கருத்து

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (10:24 IST)
சிறுபான்மையர் விவகாரத்தில் அரசியல் புரிதல் இல்லாமல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  
 
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். மேலும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் குறித்தும் அவர் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் சீமானுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
சீமான் அரசியல் புரிதல் இல்லாமல் பேசுவதாகவும் மணிப்பூரில் இந்துக்கள் சிறுபான்மையினர் தமிழகத்தில் இந்துக்கள் பெரும்பான்மையினர் என்றும் சிறுபான்மையினர்  என்றால் யாரும் குறைந்தவர்கள் இல்லை பெரும்பான்மையினர் என்றால் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்றும் அனைவரும் சமமானவர்கள் தான் என்று தெரிவித்தார்.
 
சிறுபான்மையினருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் சிறப்பு சலுகை உள்ளது என்றும்  அனைவரும் ஒன்று என்றால் பல சலுகைகள் இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்து அண்ணாமலை கூறினார் 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்