2024 தேர்தலில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது: எஸ்.வி.சேகர் கணிப்பு..!
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (07:44 IST)
2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என எஸ் வி சேகர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் எஸ்வி சேகர் பாஜக பிரபலமாக இருந்த நிலையில் தற்போது அவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்கள் வைத்து வருகிறார். இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
என்றைக்கு ஜெயலலிதாவை தவறாக அண்ணாமலை பேசினாரோ அன்றே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தொண்டர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட தமிழகத்தில் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்
மேலும் அண்ணாமலையை பாஜக தலைமை பொறுப்பில் இருந்து விரைவில் பாஜக மேலிடம் தூக்கிவிடும் என்றோம் அவர் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னராக சென்று விடுவார் என்றும் அவர் கூறினார்.