சிறையில் இருக்க வேண்டியவர் சிறைத்துறைக்கு அமைச்சராக இருப்பதா? அண்ணாமலை ஆவேசம்..!

வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (18:53 IST)
சிறையில் இருக்க வேண்டியவர் சிறைத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார் என்று தமிழக பாஜக அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை செய்து வருகிறார் என்பதும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு குவிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில்  ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட அரிமளம் விளக்கு என்ற பகுதியில் பேசிய அவர்  ’வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் இருக்க வேண்டியவர் அமைச்சர் ரகுபதி என்றும், ஆனால் அவர் தற்போது சிறைத்துறைக்கு அமைச்சராக இருப்பது தான் வேதனையாக உள்ளது என்று தெரிவித்தார். 
 
மேலும் இலங்கை தமிழர்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட பிரதமர் மோடியால் மட்டுமே ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் பூரண கும்பம் மரியாதை செய்து வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்