பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தது ஒரு குற்றமா? அண்ணாமலை கேள்வி

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (20:00 IST)
பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தது ஒரு குற்றமா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தமிழக பாஜக  மாநில துணைத்தலைவர் திரு கேபி ராமலிங்கம் அவர்களை காவல்துறையினர் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். அவர் செய்த தவறு என்ன? பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தது ஒரு குற்றமா?
 
பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிப்பதை குற்றம் என்று இந்த அரசு சொல்லுமேயானால் அதை மீண்டும் செய்ய நாங்கள் அஞ்ச மாட்டோம்.  குடும்ப ஆட்சியின் அடுத்த பரிமாணமே சர்வாதிகாரம். உங்களது அடக்கு முறைகளால் எங்களை மிரட்டலாம், எங்களைத் துன்புறுத்தலாம்;
 
உங்கள் அடக்கு முறையை மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் சர்வாதிகாரி ஸ்டாலின் உங்களை சிம்மாசனத்திலிருந்து இறக்கும் வரை மக்களின் குரலாக எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்