தமிழகத்தை இனி ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்: ரஜினி ஸ்டைலில் கூறிய அண்ணாமலை..!

வியாழன், 26 அக்டோபர் 2023 (08:16 IST)
தமிழகத்தை இனி ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என ரஜினி ஸ்டைலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் குறித்து கூறிய போது இதுபோன்ற தொடர் குற்றச்செயலில் ஈடுபவரை தமிழக போலீஸ் கண்காணிக்கவில்லை என்றும் இனிமேல் அரசையும் காவல்துறையும் நம்பி பிரயோஜனம் இல்லை என்றும் தமிழக மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று ரஜினி ஸ்டைலில்  தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் இனியாவது காவல்துறைக்கு அதிகாரத்தை கொடுத்து இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றும் திமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினரை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  

ஆளுநர் மாளிகை முன்பு இதுபோன்ற சம்பவம் நடக்கிறது என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வி எழுகிறது என்றும் அவர் கூறினார்

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்