இந்தியா டுடே தெற்கு மாநாடு 2025-ல் பேசிய அண்ணாமலை, “விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பில்லை. வட இந்திய கட்சியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் இன்னும் இருப்பதால், அவர் பாஜகவை ஒரு சித்தாந்த எதிரியாகவே பார்க்கிறார்” என்று கூறினார்.
விஜய், அதிமுக மற்றும் பாஜக என இரு கட்சிகளையும் விமர்சிப்பதாகவும், அதனால் திமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார். மதுரை மாநாட்டில், அவர் அதிமுகவை விமர்சித்தார். இதுபோன்ற நிலையில், திமுகவை எதிர்க்க அனைவரும் ஒன்றுசேரும் எதிர்காலத்தை நான் இப்போதைக்கு பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை ஒப்புக்கொண்ட அண்ணாமலை, “புதிய தலைமுறை எப்போதும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில்தான் இருக்கும். தமிழகம் எப்போதும் புதிய தலைவர்களை வரவேற்கும். இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு நல்ல இணைப்பு உள்ளது. அதே நேரத்தில், எங்களிடம் எடப்பாடி பழனிசாமி போன்ற நிரூபிக்கப்பட்ட தலைமை உள்ளது” என்றார்.