சனிக்கிழமை மட்டுமே பிரச்சாரம்.. விஜய்யின் மக்கள் சந்திப்பு திட்ட விவரங்கள்..!

Mahendran

செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (13:24 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளார். அவரது இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
 
இந்த சுற்றுப்பயணம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தொடங்கி, டிசம்பர் 20ஆம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 15 நாட்கள் இந்த சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளின் போது, பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாதவாறு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
விஜய்யின் இந்த சுற்றுப்பயணம், தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழக வெற்றிக் கழகம் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை வலுப்படுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்