தி டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழுக்கு அளித்த பேட்டின்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது வன்மத்தைக் கக்கியுள்ள அண்ணாமலையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
உலகம் முழுவதும் உள்ளள 10 கோடிக்கும் மேலுள்ள நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்கள். உலகம் முழுவதும் போற்றக்கூடிய தலைவர். எல்லா சாலைகளும் போயஸ் கார்டன் நோக்கி என்ற வகையில், இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை முன்னாள் பிரதமர்கள், இந்நாள் பிரதமர்கள் , பாஜக தலைவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். அவர் மிகப்பெரிய தலைவர், அவரது புகழ் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.
3 வருட காலத்தில் கத்துக்குட்டியான அண்ணாமலைக்கு ஒரு வரலாறும் தெரியாது. பாரம்பரியமும் தெரியாது. தன்னை முன்னிலைபடுத்த வேண்டி, அதிமுகவின் மீது சேற்றை வாரி இறைத்திருக்கிறார். தி டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழுக்கு அளித்த பேட்டின்போது, அம்மாவின் மீது வன்மத்தைக் கக்கியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.