தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது. சில இடங்களில் இயந்திர கோளாறு, மின்தடை உள்ளிட்ட காரணங்களால் சில மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் குறித்து விமர்சித்துள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல், மாநில தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. திமுகவின் வெற்றிக்காக மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட நாடகம், நகர்ப்புறத் தேர்தல். தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் முன் வருமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.