இளையராஜா எம்.பி. ஆனதில் அரசியல் இல்லை - அண்ணாமலை

வியாழன், 7 ஜூலை 2022 (11:23 IST)
இளையராஜா எம்.பி.யாக நியமிக்கப்பட்டதில் அரசியல் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 
பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இளையராஜாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பாஜகவினர் இளையராஜாவுக்கு ஆதரவாக பேசி வந்தனர்.
 
இந்த சர்ச்சை குறித்து பேசிய இளையராஜா, தான் தன் மனதில் பட்டதை பேசியுள்ளதாகவும், அதை திரும்ப பெறப்போவதில்லை என்றும் உறுதியாக தெரிவித்தார். பின்னர் ராஜ்யசபா பதவிக்காக இளையராஜா இப்படி குறிப்பிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 
 
இந்நிலையில் மத்திய அரசு இளையராஜா, பிடி உஷா உள்பட 4 பேருக்கு நியமன ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவதாக அறிவித்தது. இதனை அடுத்து இளையராஜாவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 
 
இதனைத்தொடர்ந்து இளையராஜா எம்.பி.யாக நியமிக்கப்பட்டதில் அரசியல் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது அவர், இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்தாகவே பார்க்க வேண்டும். அதில் அரசியலை பார்க்கக்கூடாது. இளையராஜாவை அனைவரும் வாழ்த்த வேண்டும் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்