பொறியியல் செமஸ்டர் மறுதேர்வில் சந்தேகமா? மின்னஞ்சல், தொலைபேசி எண் அறிவிப்பு!
செவ்வாய், 25 மே 2021 (20:58 IST)
பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில் அந்த தேர்வில் முறைகேடு நடந்ததால் மறு தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்தது
ஜூன் 3 ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஏற்கனவே கட்டணம் கட்டியவர்கள் இந்த தேர்வு கட்டணம் கட்டத் தேவையில்லை என்றும் புதிதாக தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டும் கட்டணம் காட்டினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் சற்று முன் வெளியான அறிவிப்பு ஒன்றில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மறு தேர்வு விண்ணப்பபதிவு நேற்று தொடங்கியது என்றும் annauniv.edu என்ற இணையதளத்தில் வரும் ஜூன் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் மறுதேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 7010444623 என்ற செல்போன் எண் அல்லது [email protected] மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.