அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதன், 7 ஏப்ரல் 2021 (17:38 IST)
தமிழக அரசு கொரோனா காலகட்டத்தில் அரியர் தேர்வுகளை ஆல்பாஸ் செய்து உத்தரவிட்டது மாணவர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. அந்த வகையில் கல்லூரி மாணவர்களுக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஏற்கனவே அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கும் பாஸ் என அறிவிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி  உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கின் விசாரணை முடிவில் நீதிமன்றம் ‘அரியர் தேர்வுகளை எழுத கட்டணம் கட்டி இருந்தால் ஆல்பாஸ் என்பதை ஏற்க முடியாது’ எனக் கூறியுள்ளது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்