கோமாரியால் அதிகமாகும் கால்நடைகளின் உயிரிழப்பு… போதிய தடுப்பூசிகள் தராத மத்திய அரசு- கால்நடைத்துறை அமைச்சர்!

வியாழன், 16 டிசம்பர் 2021 (13:35 IST)
மத்திய அரசு வழங்கவேண்டிய கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசியை இந்த ஆண்டு முழுமையாக வழங்கவில்லை என கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு வழக்கத்தை விட தமிழகத்தில் கால்நடைகள் கோமாரி நோய் தாக்கி அதிகளவில் உயிரிழந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களில் ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 120 க்கும் மேற்பட்ட ஆடு மாடுகள் உயிரிழந்துள்ளன.

இதுகுறித்து கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பியபோது ‘ஆண்டுதோறும் மத்திய அரசு தமிழகத்துக்கு 90 லட்சம் கோமாரி தடுப்பூசிகள் வழங்கவேண்டும். ஆனால் இந்த ஆண்டு 20 லட்சம் தான் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி போடமுடியவில்லை. இதன் காரணமாக உயிரிழப்பு அதிகமாகியுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்