குடும்பத்தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு, மனைவி, மகன், மகள் தற்கொலை: அதிர்ச்சி தகவல்
ஆந்திராவில் குடும்பத் தலைவர் ஒருவர் கொரோனாவால் உயிர் இழந்ததால் அந்த சோகத்தை தாங்க முடியாமல் அவருடைய மனைவி, மகன், மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகம் உள்பட நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் ஆந்திராவில் தினமும் சுமார் பத்தாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அம்மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்த போதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது
இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள ஒரு குடும்பத்தலைவர் திடீரென கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இதனை அடுத்து குடும்பத் தலைவர் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் அவருடைய மனைவி, மகள் மற்றும் மகன் ஆகிய மூவரும் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர்