ஆளுநரும்,அரசும் இணைந்து செயல்படவேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

ஞாயிறு, 6 நவம்பர் 2022 (15:23 IST)
ஆளுநரும் அரசும் இணைந்து செயல்பட்டு தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு திட்டங்கள் வகுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார் 
 
கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசுக்கும் ஆளுனருக்கும்  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
 
தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களை ஆளுனர் கிடப்பில் போடுவதாகவும், சனாதன தர்மம் குறித்த ஆளுனரின் கருத்துக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருவதாகவும் தெரிகிறது 
 
இந்த நிலையில் முதலமைச்சர் ஆளுநரை சந்தித்து பேசி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஆளுநர் அனைத்து உதவிகளையும் செய்து மாநிலத்திற்கு முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வேண்டுமென்றே ஆளுநர் எதிர்க்கக் கூடாது என்றும் இதனை இருவருமே கடைபிடிக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார் 
 
இதனை அடுத்து  முதல்வர் மற்றும் கவர்னர்  சந்திப்பு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்