ஊரடங்கை கைவிட வேண்டாம்: மோடிக்கு அன்புமணி அட்வைஸ்!!

திங்கள், 6 ஏப்ரல் 2020 (10:59 IST)
கொரோனா தொற்று குறையும் வரை ஊரடங்கை ஏப்.14-க்குப் பிறகும் நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் அன்புமனீ ராமதாஸ். 

 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
 
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இந்தியா முழுவதும் 109 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 571 ஆக உள்ளதும் உறுதியாகியுள்ளது. 
இந்நிலையில் பிரதமர் மோடியுடன் கொரோனா நடவடிக்கைகள் குறித்து பேசியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 
 
பிரதமர் தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து ஆலோசித்தார். இந்த சிக்கலில் சிறப்பான தலைமைப் பண்பை வெளிப்படுத்தியதற்காக எனது பாராட்டுகளை அவருக்கு தெரிவித்தேன்.
 
கொரோனா பரவல் முழுமையாக தடுக்கப்படும் வரை ஊரடங்கை நீட்டிக்கும்படி பிரதமரை கேட்டுக் கொண்டேன். இதுகுறித்த கூடுதல் யோசனைகளை எழுத்து வடிவில் பிரதமர் கோரினார். அவை விரைவில் வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்