அந்த வகையில் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பூரண மதுவிலக்கை தற்போது ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்கு நாங்கள் தான் காரணம். தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
இதற்கு முன்னர் நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையின் மூன்று தினங்களில் மட்டும் டாஸ்மாக்கில் 600 கோடிக்கும் மேல் மது வகைகள் விற்பனை செய்தது. இதை அறிந்த ராமதாஸ், பொங்கல் திருநாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும் என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.