பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு, பாமக தொண்டர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி நீக்கத்திற்கான உண்மையான காரணம் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாக கட்சிக்குள் நிலவி வந்த உட்கட்சி பூசல்கள் மற்றும் தலைமைப்பொறுப்பு குறித்த கருத்து வேறுபாடுகளே இந்த முடிவுக்குக் காரணம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.