ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்று ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது.
வருகிற ஜூலை மாதம் தனது அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்புகளை ரஜினிகாந்த் வெளியிடுவார் என அவரது சகோதரர் சத்யநாரயணா உறுதி செய்துள்ளார். மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தனக்கு நெருக்கமான பல பத்திரிக்கையாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.
இந்நிலையில், அதிமுகவிலிருந்து விலகியிருக்கும் நடிகர் ஆனந்தராஜ் இன்று காலை சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டில் அவரை சந்தித்து பேசியுள்ளார். இதிலிருந்து, ரஜினி கட்சி தொடங்கினால் அவரோடு ஆனந்த்ராஜ் இணைந்து செயலாற்றுவார் எனத் தெரிகிறது.