உடலில் தீ வைத்துக்கொண்டு 3 வது மாடியிலிருந்து குதித்த ஐ.டி,ஐ மாணவர் பலி

புதன், 28 மார்ச் 2018 (13:26 IST)
கள்ளக்குறிச்சியில் ஐ.டி.ஐ மாணவர் ஒருவர் உடலில் தீ வைத்துக்கொண்டு, 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மனைவி லதா. இவர்களது மகன் சரவணன்(26). சரவணன் தனியார் ஐ.டி.ஐ.யில் 3-ம் ஆண்டு படித்துவந்தார்.
 
இந்நிலையில் சரவணன் நேற்றிரவு வீட்டிலிருந்த மண்ணென்னையை உடலில் ஊற்றிக் கொண்டு, 3 மாடியிலிருந்து குதித்தார். சரவணனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சரவணனின்  பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சரவணன் சம்பவ இடத்திலேயே உடல் கருகியும், ரத்தவெள்ளத்தில் மிதந்தும் பலியானார்,
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் சரவணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணனின் உடலைப் பார்த்து அவரது பெற்றோர் கலங்கியது பார்ப்போரின் நெஞ்சை கலங்க வைக்கும் விதமாக இருந்தது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்