ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் முத்தையா(50). இவர் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அங்கிருந்த மக்களை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்து பெருந்துறைக்கு தப்பி வந்தார். முத்தையா பெருந்துறையில் இருப்பதை அறிந்த புனே போலீஸார், நேற்று முன்தினம் காலை பெருந்துறை வந்தனர்.
பெருந்துறை போலீசாரின் உதவியுடன், முத்தையா வீட்டிற்கு சென்ற போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையின் போது முத்தையா கழிப்பறை செல்ல அனுமதி கேட்டார். போலீஸாரும் அவரை அனுமதிக்கவே, 'ஹார்பிக்' திரவத்தை குடித்து, தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, முத்தையா புனே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.