சவப்பெட்டியுடன் மனுத்தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்: கோவையில் பரபரப்பு..!

Mahendran

புதன், 20 மார்ச் 2024 (16:08 IST)
கோவையில் சவப்பெட்டியுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் இன்று முதல் வேட்புமனு  தாக்கல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோவையில் சுயேச்சை வேட்பாளர் நூர்முகமது என்பவர் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வருவாய்  அலுவலகத்திற்கு வந்தார்

அப்போது ஜனநாயகம் இறந்து விட்டது என்பதை குறிப்பிடுவதற்காக சவப்பெட்டியை அவர் கொண்டு வந்திருந்த நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சவப்பெட்டியை உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்

இதனை அடுத்து அவர் சாலையில் அமர்ந்து ஜனநாயகம் இறந்து விட்டதாக கூறி கோஷமிட்டதை அடுத்து அவரை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’1996 ஆம் ஆண்டு முதல் வேட்புமனு  செய்து வருகிறேன், 1997 ஆம் ஆண்டு ஆறாவது வார்டில் கவுன்சிலர் ஆக வெற்றி பெற்றேன்
 
மாமன்ற உறுப்பினர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை பல தேர்தலில் நான் போட்டியிட்டு இருக்கிறேன், ஜனநாயக முறைப்படி யாரும் இல்லை, ஜனநாயகத்தின் மக்கள் வாக்களிக்க பணம் பெற்று வருகின்றனர், ஜனநாயகம் செத்துவிட்டது என்று கூறினார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்