அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடம்!

புதன், 14 அக்டோபர் 2020 (09:58 IST)
அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் இப்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் முன்னாள் எம் எல் ஏவாகவும் தற்போது அமமுகவின் தற்போதைய பொருளாளராகவும் இருந்து வரும் வெற்றிவேல் சில நாட்களுக்கு முன் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இப்போது அவரின் உடல்நிலைக் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்