தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்விட்..!

வெள்ளி, 28 ஜூலை 2023 (15:50 IST)
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன். பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் முன்வைத்த மாற்றத்தினை மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழக பாஜக நடத்தும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறேன்’ என தமிழில் பதிவு செய்துள்ளார்.
 
இந்த ட்விட்டிற்கு பதில் அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: 
 
என் மண் என் மக்கள் நடைபயணத்தை தொடங்கி வைக்க தமிழகத்தின் ராமேஸ்வரம் வரும் நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களை வரவேற்க தமிழக பாஜக சகோதர சகோதரிகள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என பதிவு செய்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்