இதற்கான காரணங்களை அவர் ஆராய்ந்தபோது தமிழக பாஜக தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சு, மக்களை கவரும் வலிமை இல்லாதது ஆகியவை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசையை நீக்க அமித்ஷா முடிவெடுத்துள்ளதாகவும் அவருக்கு பதில் நிர்மலா சீதாராமனை தமிழக பாஜக தலைவராக்கவும் திட்டமிட்டுள்ளாராம்
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து 8 வழிச்சாலை உள்பட ஒருசில திட்டங்களை நிறுத்தி வைத்தும், எய்ம்ஸ் மருத்துவமனை, கோதாவரி நீரை தமிழகத்திற்கு கொண்டு வருவது போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாம். இந்த ஆபரேஷன் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்