அதேசமயம் பிரச்சாரங்கள் ஓய்ந்த நிலையில் பாஜக பிரபலங்கள் பலரும் நாட்டில் உள்ள முக்கியமான பல கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய தொடங்கியுள்ளனர். முக்கியமாக தமிழ்நாடு பெரிதும் கவனத்திற்கு உரியதாக ஆகியுள்ளது. பிரதமர் மோடி கன்னியாக்குமரியில் தங்கியிருந்து 3 நாட்கள் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழ்நாடு வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியகிரீஸ்வரர் சிவ ஸ்தலமும், சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் மிகவும் புகழ்பெற்றவை ஆகும். இந்த கோவிலின் அருகே கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான காலபைரவர் வீற்றிருக்கிறார். இந்த காலைபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமிநாளில் வழிபட்டால் கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம்.