இந்நிலையில், அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுடன் தமிழகம் வந்துள்ள 3 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இல்லை; இங்கிலாந்தில் இருந்து வந்த இளைஞருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் ஒமிக்ரான் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில்,சென்னை , திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.