உதயநிதி கோடிகளில் சம்பாதிக்க ஒரு வாரம் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி. -பாஜக பிரமுகர் டுவீட்

வெள்ளி, 21 அக்டோபர் 2022 (18:33 IST)
உதயநிதி கோடிகளில் சம்பாதிக்க ஒரு வாரம் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி  அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக பிரமுகர் டுவீட் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த ஆட்சியின் மீது எதிர்க்கட்சிகளான பாஜக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில், வரும் தீபாவளி பண்டிகையொட்டி கடந்த இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வரும் தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி , இரவு 7 முதல் 9 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டிருந்தது.

இதைக் குறிப்பிட்டி பாஜக பிரமுகர் எஸ்.ஜி.சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில், உதய நிதி கோடிகளில் சம்பாதிக்க ஒரு வாரம் திரையரங்குகளில் சிறப்பு காட்சி அனுமதி, இந்துக்கள் சந்தோஷமாக பண்டிகை கொண்டாட 2 மணி நேரம் மட்டுமே அனுமதி ! மக்கள் பதில் கூறும் காலம் கண்டிப்பாக வரும் எனப் பதிவிட்டுள்ளார்.

உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கார்த்தியின் சர்தார் பட வி நியோக உரிமையைப் பெற்றுள்ளது குறிப்பிட்டுள்ளது.

Edited by Sinoj

உதயநிதி கோடிகளில் சம்பாதிக்க ஒரு வாரம் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி.

ஆனால் ஹிந்துக்கள் தீபாவளி அன்று வெறும் 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க அனுமதியாம்.

என்னங்க சார் உங்க சட்டம் முதல்வர் திரு.@MKStalin அவர்களே?? pic.twitter.com/S9ZQTYpWnW

— SG Suryah (@SuryahSG) October 21, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்