சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நேற்று திடீரென இந்த திரைப்படத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரின்ஸ் திரைப் படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் இருபத்தி மூன்று நிமிடங்கள் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் நீளம் திடீரென 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த மாற்றமே படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் குறைத்தது.
இந்நிலையில் காலை சிறப்புக் காட்சி ரசிகர்கள் படம் பற்றி பெரும்பாலும் நெகட்டிவ்வான விமர்சனங்களையே தெரிவித்து வருகின்றனர். பலரும் நகைச்சுவை பல இடங்களில் செட் ஆகவில்லை என்றும், விஜய் டிவி புகழ் மதுரை முத்து வசன காமெடி போல பேசிக்கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் வெகுசில ரசிகர்கள் மட்டுமே படம் சலிப்பில்லாமல் நகைச்சுவையாக செல்வதாகக் கூறியுள்ளனர். இதனால் பிரின்ஸ் படம் முதல் காட்சியிலேயே ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.