தேர்தலில் யாரோடு கூட்டணி? இன்று ஓபிஎஸ் ஆலோசனை!

புதன், 4 அக்டோபர் 2023 (08:37 IST)
அதிமுக – பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில் இன்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.



அதிமுகவிற்கும், பாஜக மாநில தலைமைக்கும் இடையே ஏற்பட்டு வந்த புகைச்சல் கூட்டணி முறிவில் சென்று முடிந்துள்ளது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. ஆனால் பாஜக தரப்பில் அதிமுகவை சமரசம் செய்யும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்தும், தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்