தனித்து போட்டி.. 32 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த பவன் கல்யாண்..!

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (16:18 IST)
இந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார். 
 
சிரஞ்சீவியின் சகோதரரான பவன் கல்யாண், ஜனசேனா என்ற கட்சியை நடத்திவரும் நிலையில் அவர் தெலுங்கானாவில் 32 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் 32 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார்.  
 
ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி,  தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில் தெலுங்கானாவில் கூட்டணி இன்றி, தனித்து களம் இறங்கப் போவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்