சென்னையில் உள்ள அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் என தகவல்..!

திங்கள், 11 டிசம்பர் 2023 (18:43 IST)
சென்னையில் உள்ள அனைவருக்கும் நிவாரணம் கிடைக்குமாறு தமிழக அரசு ஏற்பாடு செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், அதிலும் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே 6000 ரூபாய் நிவாரண உதவி கிடைக்கும் என்று முதலில் தகவல் வெளியானது. 
 
ஆனால் தற்போது எந்த ரேஷன் அட்டை வைத்திருந்தாலும், ரேஷன் அட்டை இல்லாவிட்டாலும் சென்னையில் உள்ள அனைவருக்குமே ரூபாய் 6000 நிவாரண உதவி கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 
சென்னையில் பாதிப்பு அதிகம் என்பதால் நகரின் அனைத்து பகுதிகளுக்கும்  அனைத்து மக்களுக்கும் உதவி தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்