இதனால் கண்டா 3 ஆண்டுகாலமாக அவர் தொடர் சிகிச்சை எடுத்துவந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை தூக்கத்திலே மரணமடைந்துள்ளார். இந்தத் தகவல் வெளியானதை அடுத்து சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து அவரது இறுதிச் சடங்கு குடும்பத்திற்குள் நடக்கும் நிகழ்வாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி அஜித் குடும்பத்தினர் வேண்டிக்கொண்டுள்ளனர். இன்று மாலை அஜித் தந்தையின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.