நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவருடைய தந்தை சுப்பிரமணியம் - தாய் மோகினி சென்னையில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் அவரது தந்தை சுப்பிரமணியம் திடீரென இன்று காலை 3:15 மணி அளவில் காலமானார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.