ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் அஜித் பல்கெரியாவில் இருந்து நேற்று இரவு வந்தார். ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஏற்கனவே இணையதளங்களில் அஜித் அடுத்த முதலமைச்சர் என்றும், ஜெயலலிதாவின் பிரியமானவர் என்றும் செய்திகள் பரவி வந்தது.