அ.தி.மு.க.வின் யாகங்களும், தி.மு.க.வின் போராட்டங்களும் மக்களுக்கு எந்த வித பயனுமில்லை - செ.நல்லசாமி

திங்கள், 24 ஜூன் 2019 (21:01 IST)
கரூரில் கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளருமான செ.நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., வரும் ஜூலை மாதம் 23 ம் தேதி ஈரோட்டில் கீழ் பவானி பாசன வாய்க்கால் விவசாயிகள் மாநாடு பெரிய அளவில் நடத்த உள்ளதாகவும், இந்த மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்பதோடு, இது ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றும் கூறினார். சட்டத்தின் ஆட்சியை நிலைப்படுத்தவும், முறைப்படுத்தும் மாநாடாகவும், நடந்து கொண்டிருக்கும் முறைகேடுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் மாநாடாக இந்த மாநாடு நடைபெறும் என்றும் கூறினார். 
மேலும், வரும் 2022 ம் ஆண்டில் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று மத்திய அரசு அடிக்கடி கூறி வருவதாகவும், பிரதமரும் இதை வலியுறுத்தி வருகின்றார். இதற்கு ஒரே தீர்வு, சம்பளக்கமிஷனை எப்படி ஏற்று நிறைவேற்றுகின்றதோ, அதே போல், விவசாயக்கமிஷனை நிறைவேற்ற வேண்டும், எந்த உழவரும் பிச்சை எடுப்பதில்லை, அப்படி பட்ட உழவர்களை 72 ஆண்டுகளில் பிச்சை எடுக்க வைத்தது. 
 
 
இந்த ஆண்ட மற்றும் ஆளுகின்ற அரசாங்கம் என்றார். இதற்கு ஒரே தீர்வு விவசாயக்கமிஷனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றார். தமிழகத்தில் ஆங்காங்கே அ.தி.மு.க வின் மழைவேண்டி நடைபெற்று வரும் யாகங்களும், அதே போல, தி.மு.க நடத்தி வரும் யாகங்களும் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அ.தி.மு.க வின் யாகமும், தி.மு.க வின் போராட்டமும் மக்களின் தாகத்தினை தீர்க்க போவதில்லை, ஆகவே, இந்த ஆர்பாட்டமும், யாகங்களும் அரசியல் ரீதியாகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் என்றார். இவ்வளவு வறட்சி வந்த நிலையிலும், நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தும் நிலை இன்றுவரை இருக்கும் என்றால் இந்த ஆட்சியாளர்களுக்கு தொலை நோக்கு பார்வையில்லை என்ற குற்றச்சாட்டு நாங்கள் வைக்கின்றோம் என்றார். 
 
அதே போல, கேரளா மலை நிறைந்த மாநிலம், ஆகவே, சென்னையில், ஏற்பட்டுள்ள பஞ்சத்தினை போக்க, ரயில்வண்டிகளில் திருவனந்தபுரம் பகுதியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொடுக்க முன்வந்திருக்கின்றது. அதை நாம் வரவேற்க வேண்டுமென்றார். அதே போல, தமிழர்களும், இந்தியர்கள் தான் என்றும், கேரளா மக்களும் இந்தியர்கள் தான் என்றார். மேலும்., தமிழகத்தில் வரும் உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதையொட்டி, பாராளுமன்றத்தேர்தலுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ, அந்த அளவிற்கு உள்ளாட்சி தேர்தலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றார்.
 
மேலும், இந்த உள்ளாட்சி தேர்தல் இந்திய தேர்தல் ஆணையமே எடுத்து நடத்த வேண்டுமென்றார். இதற்காக தனி அலுவலரை நியமிக்க வேண்டுமென்றார். ஆகவே தமிழக தேர்தல் ஆணையம், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், உள்ளாட்சி தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் நடத்த வேண்டுமென்றார். ஆகவே, உள்ளாட்சி தேர்தலுக்கு உயிரூட்டம் தரவேண்டுமென்றார். ஆகவே, பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் எப்படி ஒரே நேரத்தில் நடத்த முன்வருகின்றதோ, அரசியல் கட்சிகள்,. அதே போல தான் பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகிய தேர்தல்களுடன் உள்ளாட்சி தேர்தலும் நடத்த வேண்டுமென்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்