கரூரில் அ.தி.மு.க கட்சியினர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே அனுமதி வாங்கி நேரத்தில் அனுமதி கொடுத்த இடத்தில் பிரச்சாரம் செய்ய காத்திருந்த போது, அதே இடத்தில் தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரும் அனுமதி கேட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கும் அதே நேரத்தில் அனுமதி வழங்கிய நிலையில் பாதுகாப்பு கருதி அந்த இரு கட்சிகளும் கரூர் பேருந்து நிலையத்தின் அருகே பிரச்சாரம் முடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க வினர் தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரத்தினை கோவை சாலையில் உள்ள அ.தி.மு.க தேர்தல் பணிமனையில் முடித்தது.
அதே போல, தி.மு.க சார்பில் தாந்தோன்றிமலையில் முடிக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டிருந்த போது அ.தி.மு.க கட்சி மற்றும் கூட்டணி கட்சியில் வாகன பிரச்சாரங்கள் வந்து கொண்டிருந்த போது., தி.மு.க வினர் கற்களையும், கம்புகளையும் விட்டு எரிந்து தாக்குதல் நடத்தினர்.
அப்போது, அ.தி.மு.க வினர் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், அந்த கட்சி நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க வில் இருந்து பள்ளபாளையம், விஸ்வநாதபுரி, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தி.மு.க நிர்வாகிகள் சுமார் 250 க்கும் மேற்பட்டோர், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் தானேஷ் என்கின்ற முத்துக்குமார் தலைமையிலும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையிலும் இணைத்துக் கொண்டனர்.