அமமுக தலைமையில் கூட்டணி… அதிமுகவை மீட்டெடுப்போம் – தினகரன்

வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (15:40 IST)
அதிமுக கட்சியை மீட்டெடுப்போம் என்று அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு அதிமுக கட்சி கொடியுள்ள கார் கொடுத்ததாக 7 பேர் அதிரடியாக அதிமுக தலைமையால் நீக்கப்பட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா விரைவில் எல்லோரையும் சந்திக்கவுள்ளதாகக் கூறினார்.

இந்நிலையில், சசிகலா வரவுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் பரப்பாகும் எனப் பேசப்பட்ட நிலையில், தற்போது, சசிகலா ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளதாவது :

தேர்தலில்  அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றிப் பெற்ற பிறகு அதிமுக கட்சியை மீட்டெடுப்போம்; சசிகலா அணிக்கு ஓபிஎஸ் வந்தால் வரவேற்போம் அவர் மீண்டும் பரதனாகிவிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சசிகலா மற்றும் தினகரன் ஆகிய இருவருக்கும் எதிரான இருக்கும் நிலையில் இன்று தினகரன் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தேர்தலுக்கு முன் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஒபிஸ் மற்றும் இபிஎஸ் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்த நிலையில் அது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்