காலையில் முதலில் தொடங்கிய தபால் ஓட்டுகள் எண்ணிக்கையின் போது, பல தபால் ஓட்டுகள் கவர் ஒட்டப்படாத நிலையில் பிரிந்து இருந்ததது. வாக்களித்தவரின் கையெழுத்துகள் அடித்தல் திருத்தலுடன் இருந்தது. பல Serial No. கள் திருத்தப்பட்டு இருந்தன.
இதனைச் சுட்டிக் காட்டிய போது, ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்வது போல், தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சங்கீதாவின் பேச்சு இருக்கிறது.
தொடர்ந்து பிற வாக்குகளின் எண்ணிக்கையிலும் தவறுகள் நடைபெறவும், முடிவுகள் மாற்றி அமைக்கவும் வாய்ப்பு இருப்பதனால்,
மதுரை பாராளுமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, இந்திய தேர்தல் கமிஷனுக்கு புகார் மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.