ஆலந்தூர் 12வது மண்டலத்துக்கு உட்பட்ட நந்தம்பாக்கம், 158வது வார்டு அதிமுக வேட்பாளராக கவிதா ராஜசேகர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கவிதா ராஜசேகர் நேற்று மனுதாக்கல் செய்தார்.
ஆனால், அதே பகுதியில் அதிமுக வட்ட செயலாளர் பர்மா கண்ணனின், மனைவிக்கு சீட் வாங்கி தருவதாக அதிமுக நிர்வாகிகள் கூறியிருந்தததை நம்பி, பர்மா கண்ணன் ஆதரவாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், கவிதா ராஜசேகருக்கு சீட் வழங்கப்பட்டதைக் கண்டித்து நந்தம்பாக்கம் அதிமுக நிர்வாகிகளான மணிகண்டபாபு, தேவகுமார், தினகரன் ஆகிய 3 பேரும், நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரே உள்ள 2 செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.