சிங்கப்பூரில் இருந்து ஜப்பான் சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

வெள்ளி, 26 மே 2023 (07:48 IST)
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு ஜப்பான் சென்றடைந்ததாக தகவல் வெளியானது. 
 
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சமீபத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் செல்வதற்காக சென்னையிலிருந்து கிளம்பினார் என்பது தெரிந்ததே. அவர் சிங்கப்பூரில் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு கோரிக்கை விடுத்தார். 
 
மேலும் சிங்கப்பூரில் உள்ள அமைச்சர்களையும் அவர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்ட தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தற்போது ஜப்பான் சென்றுள்ளார் 
 
 ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் முதலீட்டாளர் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார் என்றும் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு ஜப்பான் தொழில் அதிபர்களை அவர் கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு அவர் விரைவில் சென்னை திருப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்