ஜப்பான் ரிலீஸ் தேதி மாற்றத்துக்குக் காரணம் நெட்பிளிக்ஸா?

வெள்ளி, 26 மே 2023 (07:41 IST)
கடந்த ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து  மூன்று ஹிட்களைக் கொடுத்த பிறகு கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படமாக உருவாகி வருகிறது ஜப்பான் திரைப்படம். இது கார்த்தியின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது படம் நான்கு மொழிகளில் தீபாவளிப் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படம் ஆயுதபூஜை பண்டிகை விடுமுறையில் லியோ படத்தோடு வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் அதே நாளில் ரிலீஸ் ஆகும் லியோ படத்தையும் ஜப்பான் படத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி ரிலீஸூக்கு வாங்கியுள்ளதால் இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவேண்டாம் என வலியுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.அதனால்தான் ஜப்பான் திரைப்பட ரிலீஸ் தீபாவளிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்