விடுதலைக்கு பின் சசிகலாவின் திட்டம் என்ன?

ஞாயிறு, 7 ஜூலை 2019 (20:58 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். தண்டனைக்காலம் முடிவடைதற்குள் அவர் விடுதலையாகிவிடுவார் என்று செய்திகள் வெளிவந்தாலும் அதில் சிறிதும் உண்மையில்லை என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் இரண்டு ஆண்டு தண்டனையை முடிக்க போகும் சசிகலா, இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து விடுதலை ஆனவுடன் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லையாம். உயிர்த்தோழி உயிருடன் இல்லை, கணவரும் இல்லை, குழந்தையும் இல்லை. எனவே கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தாலும் ரத்த சொந்தம் என யாரும் இல்லாததால் கடும் வருத்தத்தில் இருக்கின்றாராம் சசிகலா. 
 
எனவே சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே உள்ள வீட்டில்தான் அவர் தங்க திட்டமிட்டுள்ளாராம். அவ்வப்போது வேதா இல்லம் சென்று ஜெயலலிதாவுடன் வாழ்ந்த மலரும் நினைவுகளுடன் மீதி நாட்களை கழிக்கவுள்ளதாகவும் அமமுக உள்ளிட்ட எந்த கட்சியிலும் எந்த பொறுப்பையும் ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்