மருத்துவர் கார்த்திகா உயிர் இழப்பதற்கு முன் அவர் செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் தயவுசெய்து கொரோனா வைரஸை யாரும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னால் இப்போது பேசக்கூட முடியவில்லை. இருப்பினும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக பேசுகிறேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். மதுரையை அடுத்து சென்னையிலும் கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.