ஜூன் தொடக்கத்துக்குள் கொரோனா உச்சத்தை தொடும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சனி, 22 மே 2021 (11:32 IST)
தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

 
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதீப் கவுர், குகநாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 19 மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு பின்னர் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
 
இதனிடையே இந்த ஆலோசனையின் போது, தமிழகத்தில் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 2 வாரங்களில் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மே இறுதியிலோ ஜூன் தொடக்கத்துக்குள் கொரோனா உச்சத்தை தொடும் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்