மனைவியை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு...கழுத்தறுத்து கணவர் தற்கொலை

Sinoj

திங்கள், 8 ஜனவரி 2024 (13:10 IST)
ஈரோடு மாவட்டத்தில்  மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்றுவிட்டு  கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அம்மன் கோயில் தோட்டத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்( 55). இவர் மனைவி கனிமொழி.

ஈஸ்வரன் கவுந்தப்பாடி அய்யம்பாளையம் பிரிவு  மற்றும் காஞ்சிக்கோவிலை அடுத்த நசியனூர் பிரிவு  பகுதிகளில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இத்தம்பதிக்கு கார்த்தி என்ற மகன் உள்ளார். இவர் அசாம் மா நிலத்தில் பைலட்டாக வேலலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில்,  பெட்ரோல் பங்குக்கு வழக்கம் போல் சென்றுவிட்டு நேற்று முன்தினம்  நள்ளிரவு 2:30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார் ஈஸ்வரன்.

அதன்பின்னர்,  நேற்று காலலை 6 மணி அளவில் கார்த்தி தன் பெற்றோருடன் பேசுவதற்காக செல்போனில் தொடர்பு கொண்டபோது இருவரும் போனை எடுக்கவில்லை.
அதனால், உறவினர்க்கு அழைத்து பெற்றோரை பார்க்கும்படி கூறியுள்ளார்.

அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால்  கதவை தட்டியும் திறக்கவில்லை. எனவே கதவை உடைத்து உள்ளே சென்றனர்,.

அங்கு, கனிமொழி படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். அதேபோல், ஈஸ்வரன் கழுத்தில் ரத்தத்துடன் தூக்கில் பிணம் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களை மீட்டு உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்று, தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டதற்கு கடன் தொல்லை காரணமா ? என்ற  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்