சென்னை வழக்கறிஞர் கொலை - 8 பேர் கைது - போலீசார் அதிரடி

வியாழன், 23 ஜூன் 2016 (11:31 IST)
சென்னையில் வழக்கறிஞர் ரவி கொலை வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

 
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவி என்பவர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் திருநங்கைகளுக்கு ஆதரவாக பல்வேறு வழக்குகளில்  ஆஜராகி வந்தார்.
 
இந்த நிலையில், வழக்கறிஞர் ரவி எம்கேபி நகர் பாலம் அருகே திருநங்கைகள் சிலருடன் நேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ரவியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
 
இதனால், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி  அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர்.
 
இந்த நிலையில், போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மாதவரம் மற்றும் வியாசர்பாடி காவல் நிலையங்களில் வழக்கறிஞர் ரவி மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
 
மேலும், அடிக்கடி இவர் கட்டப்பஞ்சாயத்து ஈடுபட்டு வந்ததே அவரது கொலைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த கொலை குறித்து, வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திய போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்