ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் சென்னையின் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வடப்பழினி ஆகிய இடத்தில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையின் போது போலீசார் சிலரே ஆட்டோ, குடிசைகளுக்கு தீ வைத்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர் பாலு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை காலை வருகிறது.