40 தொகுதிகளில் வெறும் 500 வாக்குகளே வித்தியாசம்: அதிமுக வெற்றிக்கு இழுபறி

வியாழன், 19 மே 2016 (13:58 IST)
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்தது என அதிமுகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஆனால் அதிமுக, திமுக இடையே 40 தொகுதிகளில் 500 வாக்குகள் வித்தியாசத்தில் இழுபறி நீடிக்கிறது.


 
 
அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என செய்திகள் பரவி வரும் வேளையில், இந்த செய்தி அதிமுகவினருக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
 
அதிகாரப்பூரவமாக அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் அறிவிக்கப்படவில்லை. வெறும் முன்னிலை நிலவரங்களை வைத்து அதிமுக தான் ஆட்சியை பிடிக்கும் என சொல்லி வருகின்றனர்.
 
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ரோசையா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் என ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் வந்தவண்னம் உள்ளன. முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் முன்னனியில் உள்ள தொகுதிகளில், 40 தொகுதிகளில் வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக, அதிமுக இடையே இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த இழுபறியே வெற்றியே தீர்மாணிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக வெற்றி பெறுவது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்

வெப்துனியாவைப் படிக்கவும்